துணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணைகுடியரசு தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ள நிலையில், அதில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பிக்கள் ஒழுங்காக ஓட்டுகூட போடத் தெரியாதவர்களாக உள்ளனரா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது

பாஜக, காங்கிரஸ்ஸ ஐயூஎம்எல் கட்சிகளின் தலா 2 எம்பிக்கள் வாக்களிக்க வில்லை. வெங்கையா நாயுடு 516 வாக்குகளையும், எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளையும் பெற்றனர் என்பது குறிப்பிட த்தக்கது.
 

Leave a Reply