துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக் காலம், வரும்,10ம் தேதி(ஆக.,10) நிறைவடைகிறது. இதையடுத்து துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று( ஆக.,5) நடந்தது.


இதில் பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிசார்பில், முன்னாள் மத்திய அமைச்சர், வெங்கையா நாயுடுவும், காங்., தலைமையிலான, எதிர்க்கட்சிகளின் சார்பில், கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட்டனர். இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய ஓட்டுபதிவு, மாலை, 5:00 மணிக்கு நிறைவடைந்தது.

இத்தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். மொத்தம் 785 ஓட்டுக்களில் 771 ஓட்டுக்கள் என 98 சதவீதி ஓட்டுக்கள் பதிவாகின. 14 எம்.பி.க்கள் ஓட்டுக்கள் பதிவாகவில்லை. இதைத் தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. தேர்தல் அதிகாரி ஷாம்ஸ்கர் கே.ஷரீப் தேர்தல் முடிவை  அறிவித்தார். இதில் பா.ஜ. வேட்பாளர் வெங்கையா நாயுடு 516 ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Leave a Reply