உத்தரப் பிரதேச மாநில போலீஸார் கடந்தவாரத்தில் 18 என்கவுண்ட்டர்கள் நடத்தியுள்ளனர். துப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில் அளித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். ஆனால், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து இருக்கிறோம் – யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தவாரம் இருநாட்களில் போலீஸார் 18 என்கவுண்ட்டர் நடத்தினர், 25 குற்றவாளிகளை கைதுசெய்தனர். இந்த என்கவுண்ட்டர் நடத்தியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி ஆளும் பாஜக அரசிடம் விளக்கம்கேட்டு இருக்கிறது. போலீஸாரும், குற்றவாளிகளை கைது செய்ய போகையில் தற்காப்புக்காகவே சுட்டோம் என்று ஊடகத்தினரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்திடம் என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து லக்னோவில்  நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்,

மாநிலத்தில் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். ஆனால், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து இருக்கிறோம் அவர்கள் துப்பாக்கிமீது நம்பிக்கை உள்ளவர்களாக இருந்ததால், அவர்களுக்கு துப்பாக்கியால் பதில் அளித்தோம். இதைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்று அனைத்து உயர் அதிகாரிகளிடம் நான் தெரிவித்துவிட்டேன் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Leave a Reply