இந்திய நிதி யுதவியால் புனரமைக்கப்பட்ட யாழ்ப் பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறி சேனாவுடன் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.

டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி பேசியதாவது:

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வெறும்செங்கல் மற்றும் கலவையால் மட்டும் கட்டப்பட்டதல்ல. இது இருநாடுகளின் நம்பிக்கை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சின்னமாக விளங்குகிறது. வடக்குமாகாண இளைஞர்களின் வளமான சுகாதாரமான எதிர் காலத்துக்கு இந்த அரங்கம் உதவியாக இருக்கும்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவிய அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு நன்றி.

நாட்டுமக்களின் வளமான எதிர் காலத்துக்காக இலங்கை அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும். நம் உறவு என்பது இருநாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல. வரலாற்று தொடர்பு, கலாச்சாரம், மொழி, கலை மற்றும் புவியியல் ரீதியாக நம் இருநாடுகளுக்கு இடையே நீண்ட கால உறவு நீடித்து வருகிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சியால் அண்டை நாடுகளும் பயனடையும் என்று நம்பு கிறோம். அந்த வகையில் பொருளாதார வளமிக்க நாடாக இலங்கை உருவெடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply