மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை குழுக்கள் மூலமாக, மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர் , செலவிடப்படும் பணம்குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்வதில் என்ன தவறு இருக்கிறது? துர்கா பூஜை குழுக்கள் சிலவற்றின் தலைவர்களாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியதலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர்.

அவர்கள் தங்களிடம் உள்ள கருப்புப் பணம் மற்றும் ஊழல் பணத்தை இந்தக்குழுக்கள் மூலமாக மாற்றிக் கொள்கின்றனர். இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்து விடும் என்பதற்காக, வருமான வரித்துறை நோட்டீஸைப்பார்த்து திரிணமூல் காங்கிரஸ் அச்சம் கொண்டுள்ளது.

ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததைவிட முஸ்லிம் மக்களுக்கே மம்தா பானர்ஜி முக்கியத்துவம் அளித்தார். துர்கா பூஜை குழுக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர்போல மம்தா பானர்ஜி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். பிறகு ஏன் பலசமயங்களில் மொஹரம் பண்டிகை ஊர்வலத்துக்காக, துர்கா சிலையை கடலில் கரைக்கும் சடங்கை நிறுத்தினார்

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ராகுல் சின்ஹா

மேற்கு வங்கத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை பண்டிகைக்காக அமைக்கப்படும் குழுக்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பண்டிகைக்கு செலவு செய்யப்படும் பணம் குறித்த தகவல் கோரியும், அதற்கான வரி செலுத்தக் கோரியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தார். மேலும், பண்டிகைகளுக்கு செலவு செய்யும் பணத்துக்கு வரி விதிக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

 

Comments are closed.