தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலஒதுக்கீடு செய்வதற்கான உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுகொண்டது.

ஸ்டெர்லைட் ஆலைசெயல்பட நிரந்தரமாக தடைவிதித்து சீல் வைக்கப்பட்ட நிலையில், அந்த ஆலை நிர்வாகத்திற்கு சிப்காட் இயக்குநர் எழுதியகடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்க படுவதாகக்கூறி, பொதுமக்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தினர். தங்களது உடல்நிலை பாதிக்கப் படுவதாகவும் புகார் கூறினர். இதனால், சிப்காட் ஆலைக்கு ஒதுக்கப்பட்ட நில ஒதுக்கீடு ரத்து செய்யப் படுகிறது. இதற்காக ஆலை நிர்வாகத்திடம் பெறப்பட்ட பணம் விரைவில் திரும்ப ஒப்படைக்கப் படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2005, 2006,2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் , ஆலையின் 2வது யூனிட் விரிவாக் கத்திற்காக 342.22 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது ரத்து செய்யப் படுகிறது.

Leave a Reply