தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம்  சென்னையில் ரசிகர்களை சந்தித்த ரஜினி காந்த் விரைவில் போருக்கு தயாராகுங்கள் என பேசினார். இதனையடுத்து அவர் அரசியலில் ஈடுபடுவார் என கூறப்பட்டது.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் ஒருகருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திரமோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும், தூய்மை பணியே இறைப்பணி என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  வாஜ்பாய் தலைமையிலான பிஜேபி ஆட்சியில் நதிகள்இணைப்பு  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக தான் ஒருகோடி ரூபாய் தர தயாராக உள்ளதாக நடிகர் ரஜினி கூறியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply