தென்னிந்திய நதிகளை இணைப்பது என்வாழ்நாள் கனவு என நடிகர் ரஜினி தெரிவித்தார்.சென்னை நந்தனத்தில் நடந்த காலாபடத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: நான் நடித்துமுடித்து விட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓடவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னிந்திய நதிகளை இணைத்தபின் நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை. தண்ணீர்பிரச்னை என்றால் என்னை அறியாமலும் ஆர்வம் வந்துவிடுகிறது. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் இமயமலை செல்கிறேன்.

75 ஆண்டுகளாக ஒலித்து கொண்டிருக்கும் கருணாநிதியின் குரலைகேட்க ஆவலாக இருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். கருணாநிதியின் குரலை கேட்க மிகஆவலாக உள்ளேன்.
 

புத்திசாலியுடன் பழகலாம்; அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது. நல்லவனாக இருக்கலாம்; மிகவும்நல்லவனாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கோழை. யார் என்ன சொன்னாலும் நான் என்பாதையில் தொடர்ந்து செல்வேன்.

கடமை இருப்பினும் சரியானநேரம் இன்னும் கைகூடவில்லை. நல்லநேரம் வரும். தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply