தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) ஆட்சியில் தெலங்கானா மாநிலத்தில் வளர்ச்சி முடங்கி விட்டது என்று பாஜக தேசிய பொது  செயலாளர் ராம் மாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.


 தெலங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ளது. ஆந்திரத்தில் இருந்து பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல்தேர்தலில் டிஆர்எஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலங்கானா தனிமாநிலப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சந்திர சேகர் ராவ், மாநிலத்தில் முதல் முதல்வரானார். சட்டப்பேரவைக் காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் நோக்கில் மாநிலப் பேரவையை அவர்கலைத்தார்.

இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் – தெலுங்கு தேசம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இதுதவிர பாஜகவும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்,  ஹைதராபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 

தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க அனைத்து தகுதிகளும் உள்ள ஒரேகட்சி பாஜக மட்டும்தான். தெலங்கானாவின் வளர்ச்சியை முடக்கியதைத்தவிர வேறு எதையும் டிஆர்எஸ் கட்சி செய்யவில்லை. மாநிலங்களில் பல்வேறு கனிமவளங்களும், ஆற்றல்மிகுந்த மனித வளமும் இருந்தும் வளர்ச்சி இல்லை. இதற்கு அரசின் நிர்வாகத்திறன் இன்மைதான் காரணம் என்றார் அவர்.
 

Leave a Reply