தெலங்கானாவில் தொங்கு சட்ட சபை ஏற்பட்டால் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நிறைவுபெற்றுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தெலங்கானாவில் தொங்கு சட்ட சபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில பாரதிய ஜனதா தலைவர்  கே.லட்சுமண் கூறியதாவது:-

தெலங்கானாவில் தொங்கு சட்ட சபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவுகொடுப்போம். காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகிய காட்சிகள்தான் எங்களுக்கு எதிர் நிலைப் பாட்டில் உள்ள கட்சிகளாகும். எனவே அவர்களை ஆட்சி யமைக்க விடமாட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply