தென்னிந்தியாவைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக பலமாக தனதுகாலைப் பதித்துள்ளது . தென்னிந்தியாவில் கர்நாடகா மட்டும் விதிவிலக்கு. அந்த மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மற்ற தென் மாநிலங்களில் மக்கள் இன்னும் பாஜகவை அங்கீகரிக்கவில்லை. இதற்குக்காரணம் இந்த மாநிலங்களில், மாநிலக் கட்சிகளே பிரதானமாக வளர்ந்துவருவதும், மக்கள் அவர்களையே நம்புவதும் தான்.  இதை உடைத்துக் காட்ட பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தயாராகிவிட்டார்.

தெலுங்கானா மாநில சட்டமன்றத்துக்கு கடந்தாண்டு தேர்தல் நடந்தது. இனிவரும் 2023ல் நடக்கவிருக்கிறது. அதற்குள் அந்த மாநிலத்தின் பாஜகவில் ஒரு உறுப்பினராகி, அங்கிருந்து தனது தெலுங்கானா அரசியல் களத்தை துவக்க அமித் ஷா தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தெலுங்கானா பாஜக தலைவர் கே. லக்ஷ்மன் பிடிஐக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ”தெலுங்கானா மாநிலத்தின் பாஜக உறுப்பினராகி களப்பணியில் இறங்க அமித்ஷா உத்தரவாதம் அளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில விடுதலை நாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று தெலுங்கானா மாநிலத்திற்கு அமித்ஷா செல்ல இருக்கிறார். அன்றைய நாளில்தான், 1948ல் இந்தியாவுடன் ஐதராபாத் இணைக்கபட்டது. இதை கொண்டாடும் வகையிலும் அமித் ஷா தெலுங்கானா செல்கிறார். அன்று அந்தமாநிலத்தின் பாஜக உறுப்பினராகிறார்.

மாநிலத் தலைவர் லக்ஷ்மண் கூறுகையில், ”தெலுங்கானா மாநில விடுதலைநாளை முன்னர் இருந்த அரசுகளும் கொண்டாடவில்லை. தற்போதைய கே. சந்திரசேகர் ராவ் அரசும் கண்டு கொள்ளவில்லை. ஆந்திரா பிரிக்கப்படாமல் இருந்தபோது, ”ஏன் தெலுங்கானா மாநிலவிடுதலை நாள் கொண்டாடவில்லை?” என்று அப்போதைய முதல்வராக இருந்த கே. ரோசைய்யாவை சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்பினர். தற்போது அவரே அந்ததவறை செய்து வருகிறார். அதனால்தான் நாங்கள் கொண்டாடுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே பாஜக 18 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 12 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க மாநில பாஜக திட்டமிட்டு இருந்தது. ஆனால், 18 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று திட்டவட்டமாக அமித் ஷா தெரிவித்து விட்டாராம்.

கடந்த மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 17 மக்களவை இடங்களில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ராவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுபாஜகவுக்கு புத்துயிர் அளித்துள்ளது.

நிசமாபாத் மக்களவைதொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் டி. அரவிந்திடம் தோற்றார். 70,875 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று இருந்தார். காங்கிரஸ் வாக்குகள் பிரசாத்துக்கு சென்றதால் கவிதா தோற்றதாக பின்னர் நடந்தஆய்வில் தெரிய வந்ததாக தகவல் வெளியானது.

எப்படி பார்த்தாலும், 4 மக்களவைத் தொகுதிகளை அள்ளிய பாஜகவால் அடுத்தசட்டமன்ற தேர்தலில் எளிதாக ஆட்சியை பிடிக்க முடியும் என்று கருத்துக்கள எழுந்துள்ளது. மண்ணின் மைந்தர்கள் என்று கூறிவரும் ராவின் கணக்கும் கைகொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Comments are closed.