தெலுங்கானாவில் நடக்க உள்ள சட்ட சபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என அமித்ஷா கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒரே நாடு ஒரேதேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திரசேகர ராவ் ஆதரவுதெரிவித்தார். ஆனால், இன்று அவரது கட்சி, தனது நிலையை மாற்றிகொண்டு, சிறியமாநலத்தில் இரண்டு தேர்தல் நடத்த வழி ஏற்படுத்திவிட்டார். மக்கள் தலையில் ஏன் இந்தசெலவை ஏற்படுத்தினீர்கள் என சந்திரசேகர ராவை கேட்க விரும்புகிறேன். தெலுங்கானாவில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிடும். வலிமையான சக்தியாக மாநிலத்தில் உருவாகும். மதரீதியாக இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சட்டம் அனுமதி வழங்காது என்பதுதெரியும். மாநிலத்தை ஆண்டகட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்குவங்கி அரசியல் மீண்டும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply