தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., தன்னுடைய செல்வாக்கை நிரூபித்துள்ளது . தற்கரியதியாக ஆளும் கட்சி . ,படுதோல்வியடைந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகாரட்சி 150 வார்டுகளை கொண்டது. இம்மாநகராட்சிக்கு டிச.,1ல் தேர்தல்நடந்தது. மாநிலத்தை ஆளும் டிஆர்எஸ், பாஜ, காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. டிஆர்எஸ் – பாஜ இடையே நேரடிபோட்டி என்றாலும், ஓவைசியில் ஏஐஎம்ஐஎம். கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலில்பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பலத்தபாதுகாப்புடன் துவங்கி நடந்துவருகிறது. முடிவுகள் தெரிந்த 139 வார்டுகளில் இரவு 8. 30 மணி நிலவரப்படி டிஆர்எஸ் 56 லும், பா.ஜ.க, 49லும், ஏஐஎம்ஐஎம்43 லும் காங்கிரஸ் 2 வார்டிலும் முன்னிலையில் உள்ளன.

பா.ஜ.வின் மூத்த தலைவர்களின் பிரசாரத்தால் மாநிலத்தில் பா.ஜ. தனது செல்வாக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்தமுன்னேற்றம் வரப்போகும் சட்டசபை தேர்தல்களிலும், தென்மாநிலங்களிலும் பா.ஜ.,தனது செல்வாக்கை உயர்த்தும் எனவும் கூறப்படுகிறது. கடந்த2016 ல் நடந்தமாநகராட்சி தேர்தலில் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த பா.ஜ., தற்போது 47இடங்களில் வெற்றிபெற்று தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.