பதவியேற்றப்போது தன்னை ஒரு “பிரதம சேவகன்” என்று அறிமுகம் செய்துக்கொண்ட பிரதமர், இப்போது ஒரு இந்திய சேவகனாக அரசு என்ன செய்திருக்கிறது என்பதை தனது சுதந்திர தின உரையில் பட்டியலிட்டுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி! இந்த தெளிவும், நேர்மையும், பணிவும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!

     ஒரு மன்னனின் முதல் பணி மக்களை சுறண்டுவோரை தண்டித்து அவர்களின் கொடுமைகளிலிருந்து மக்களை காப்பாற்றுவதுதான்! அதை தைரியத்தோடு செய்து முடித்துள்ளார் பிரதமர்! கள்ளப்பணம் மற்றும் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையும், வரி ஏய்ப்பு செய்வோரை வழிக்கு கொண்டுவரும் ஜி.எஸ்.டி நடவடிக்கையும் மக்களை சுரண்டுவோர்மீது மோடியால் விடுக்கப்பட்ட அஸ்திரங்கள் ஆகும்!

     ஜி.எஸ்.டி யால் விலைவாசி குறைந்திருக்கிறது, மருந்து மாத்திரைகளின் விலை குறைந்திருக்கிறது, நிலம் மற்றும் கட்டிடங்களின் விலை குறைந்திருக்கிறது இவை அனைத்திற்கும் மேலாக இன்னொன்று இருக்கிறது! அது என்னவென்றால், ஜி.எஸ்.டி வந்ததின் காரணமாக ஏற்கெனவே வரி ஏய்ப்பு செய்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது முறையாக வரி கட்டத்துவங்கியுள்ளனர். வியாபாரிகள் மக்களிடமிருந்து வாங்கும் வரியினையும், வருமானத்திற்கான வரியினையுன் அரசுக்கு கட்டித்தான் ஆகவேண்டும் என்னும் நிர்ப்பந்தம் ஜி.எஸ்.டி யால் உருவாகியுள்ளது!  

     மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்போர் மீது நடவடிக்கை மேற்கொண்டதால் விலைவாசி கட்டுக்குள் வந்துள்ளது மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்! இந்த நிலையில், கொடி ஏற்றிவைத்த பிரதமரின் பேருரையை நாம் வரி வரியாக பார்க்கலாம்!

 

     “நாட்டு மக்களையும், ஏழைகளையும் சுரண்டியவர்கள் இன்று நிம்மதியாக தூங்க முடியவில்லை. ரூபாய் நோட்டு வாபசிற்கு பின் ரூ. 3லட்சம் கோடி வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது அரசு சொல்லவில்லை நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

     ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு கறுப்பு பணம் வங்கிகளுக்கு திரும்பியுள்ளது. தற்போது, கறுப்பு பணம் செய்தவர்கள், அதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். 
 

     அரசின் நடவடிக்கையால் கறுப்பு பணம் பதுக்கபவர்களுக்கு செக் வைக்கப்பட்டது.

 

     வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும் இது இரண்டு மடங்காகும். கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையின் பலன்.
18 லட்சம் பேர் வருமானத்திற்கு எதிராக அதிகளவு வருமானம் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான விளக்கத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும். 
 

     கடந்த 3 வருடத்தில் ரூ.1.25 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுவாபஸ் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
 

     3 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 400 நிறுவனங்கள் ஒரே முகவரியில் செயல்படுகிறது. 

 

     ஜிஎஸ்டியால் செக் போஸ்ட்கள் அகற்றப்பட்டன. இதனால், 30 சதவீத பொருட்களை கொண்டு செல்லும் டிரக்குகள் 30 சதவீத நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. வரி காரணமாக ஆயிரகணக்கிலான கோடி மற்றும் நேரம் ஆகியவை சேமிக்கப்பட்டுள்ளன.
 

     தொழில் செய்யும் திறன் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வெற்றி பின்னால், கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், அதிக பலன் பெறலாம் என்பதற்கு இந்த வரி உதாரணம். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், தொழில் செய்வது எளிதாகியுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் தோளேடு தோள் சேர்ந்து பாடுபட்டன. அரசு எடுத்த நடவடிக்கைகள் நாட்டிற்கு பலன் அளிக்கும். ஜிஎஸ்டி நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும். 

 

       ஒரு காலத்தில் மண்ணெண்ணை மற்றும் யூரியா ஒதுக்கீட்டுக்காக மத்திய மாநில அரசுகள் இடையே கடும் மோதல் ஏற்படும். மத்திய அரசு பெரியண்ணன் போல் செயல்படும். ஆனால், கடந்த 3 வருடங்களில் யூரியா உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. மண்ணெண்ணைக்கு மாற்றாக சமையல் காஸ் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு மண்ணெண்ணை தேவை குறைக்கப்பட்டது.
 

     நானும் மாநில முதல்வராக இருந்துள்ளதால், நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு முக்கியம் என்பதை அறிவேன். முதல்வர்கள் மற்றும் மாநில அரசுகளின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்துள்ளேன். இதனால் தான் நாங்கள் ஒருங்கிணைத்து கூட்டாட்சி தத்துவத்திலும், தற்போது, துடிப்புமிக்க கூட்டாட்சி தத்துவத்திலும் கவனம்செலுத்தினோம். தற்போது அனைத்து முடிவுகளையும் ஒன்றாக எடுக்கிறோம்.

 

      ஆதார் அட்டையால் ஊழல் ஒழியும். காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் சொர்க்க பூமியாக மாற்றப்படும். கோக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவத்தால் நாடே மன வேதனையில் உள்ளது.

 

      ரூ.8000 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளது.”

 

      ராணுவ வீரர்களின் சாதனைகளை தெரியப்படுத்த புதிய இணையதளம் உருவாக்கப்படும். ''

 

 

     பிரதமரின் இந்த வார்த்தைகள் மிக மிக அருமை! 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஊறிக்கிடந்த ஊழலை ஒழித்துவிட்டு, செய்ததை சொல்கிறார் பிரதமர்! ஆனால் இங்கு அரசை எதிர்த்து அரசியல் செய்வோர் பதுங்கி தாக்கும் எதிர்ப்பாளர்களைப்போல செயல்படுகிறார்கள்! சாதனைகளை பாராட்டமாட்டார்கள்! விமர்சிக்கவும் மாட்டார்கள் பதுங்குவார்கள். பத்துநாள் களித்து எதுவுமே செய்யவில்லை என்று பொய் சொல்வார்கள்!

     எதிர்கட்சியினரின் இத்தகைய செயல் பாதகச்செயலாகும்! பாதகம் செய்வோரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! என்று பாரதி சொல்லியுள்ளார்!

                                                    – குமரிகிருஷ்ணன்

Leave a Reply