நாட்டிற்கு எதிராக குரல் எழுப்பிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்போய் சந்தித்து பேசியதற்கு அக்கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுளளார்.
 
உத்திரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனில் பாஜக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷா பேசுகையில், தேசிய பல்கலைகழகம் ஒன்றில் தேசவிரோத வாசகங்கள் கூறப்பட்டுள்ளன.
 
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்க ராகுல்செல்கிறார். அதனால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி யாருக்கு துணை நிற்கிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேசவிரோத சக்திகள் நியாயப்படுத்தப் படுகின்றன. நடக்கிற விசயம் தேசத்திற்கு எதிரானவை இல்லை எனில், அது என்ன என்று நான் ஆச்சரிய மடைகிறேன்?. இப்படிப்பட்ட கோஷங்கள்தான் கருத்துசுதந்திரம் என்றால், தேசதுரோகமாக எதை கூறுவீர்கள்? இதைப்பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கருத்து என்ன? அவரும் தனது மகனின்செயலை ஆதரிக்கிறாரா? இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Leave a Reply