தேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் பிரதமர் மோடியிடம் காண்கிறேன், அவரைப்போலவே பல தலைமுறைகளுக்கு இவரும் உத்வேகம் அளித்துள்ளார் என்று மத்திய அமைச்சர் மகேஷ்சர்மா தெரிவித்துள்ளார்.

உப்பு சத்தியாகிரகம் பற்றிய நூல்அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்தியபண்பாட்டு அமைச்சர் மகேஷ் சர்மா மேலும் கூறுகையில், “இன்று நம்மிடையே இன்னொரு காந்திஜி போல் நம் பிரதமர் இருப்பது அதிர்ஷ்டமே, இவர் அனைவருக்கும் உத்வேகமாக திகழ்கிறார்.

உப்புச்சத்தியாகிரகம் என்பது உப்பு பற்றியது மட்டுமல்ல, தலை முறைகளுக்கு உத்வேகமளிக்கும் விஷயமாகும், இதையேதான் பிரதமர் மோடி இப்போது செய்துவருகிறார்.

நாட்டின் ஒவ்வொருவருக்கும் சுதந்திர ஒளிகிடைக்கும் என்ற ரீதியில்தான் பிரதமர் இயங்குகிறார், பிரதமரது கனவு காந்திஜியின் கனவுகளை நிறைவேற்று வதாகும்.

இந்தநூல் இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது, குறிப்பாக உலகிற்கு மனிதநேய தேவைப்படும் இந்தக் காலக்கட்டத்தில் இப்படியொரு புத்தகம் வெளிவருவது முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.

உப்பு சத்தியாகிரகம் பற்றிய இந்த புதியநூலை எழுதியவர் தேசிய காந்தி அருங்காட்சியக முன்னாள் இயக்குநர் ஒய்.பி.ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply