இந்து வலது சாரியினர் கூட்டத்தில் தீவிரவாதம் பரவியிருக்கிறது என்று கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் கமலை சீற்றத்துடன் விமர்சித் துள்ளார்.

விஸ்வரூபம் பட பிரச்சனையின் போது முஸ்லிம் அமைப்புகள், 20 ஆண்டுகளுக்கு எங்கள் மீதான கமலின்பயம் போகாது என்றது சரிதான் போல என்றும், இந்துக்கள் மீது தாக்குதல்தொடுப்பது வெட்கக் கேடானது என்றும் கமல்ஹாசனை சாடியிருந்தார்.

மேலும், கமல் எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலைமாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டார் என்று கிண்டலடித்துள்ள எச் ராஜா, தேசபக்தர்கள் கமலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply