அசாம் மாநிலத்தில், தேசியகுடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகளை, நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்த பதிவேட்டில், வெளிநாட்டினர் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும், இந்திய குடிமக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்

அஸ்ஸாம் பூர்வகுடிகள் யார் என்பதை அறிவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்டது.அஸ்ஸாமில் உள்ள மொத்தம் 3.29 கோடி மக்களில் 2.89 கோடி பேரின்பெயர்கள் மட்டுமே என்ஆர்சியில் இடம்பெற்றன.

கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டது.40,70,707  பேரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. தாங்கள் அஸ்ஸாம் பூர்வகுடிகள்தான் என்பதை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தங்களையும் பட்டியலில் சேர்க்கக்கோரி பட்டியலில் இடம்பெறாதவர்கள் விண்ணப்பித்தனர்.
எனினும், 37,59,630 பேரின் விண்ணப்பங்கள்  உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப் பட்டுவிட்டன.2,48,077 பேரின் பெயர்கள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply