‘தேசிய குடிமக்கள் பதிவேடுதிட்டத்தை, நாடுமுழுவதும் அமல்படுத்த வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் சகோதர அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

ஆர்எஸ்எஸ்., அதன், 84க்கும் மேற்பட்ட சகோதர அமைப்புகளின் கூட்டம், மத்திய பிரதேச மாநிலம், சத்தார் பூரில் நேற்று நடந்தது.கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விஸ்வஹிந்து பரிஷத் மூத்த தலைவர் கோக்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, நாடுமுழுவதும் அமல்படுத்த வேண்டும். அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை, மக்கள் அனைவரும், திறந்தமனதுடன் ஏற்றுக் கொள்ள வேணடும் என, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.