சென்னை மதுரை இடையே இன்று தொடங்கி வைக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை தற்போது காண்போம்.

குளிர்சாதன வசதிகளை உள்ளடக்கிய 15 பெட்டிகளை கொண்டதேஜஸ் ரயிலில் ஒரு உயர்வகுப்பு பெட்டியும், இரண்டு டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் உள்ளன.

ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜி.பி.எஸ் வசதி, எல்.ஈ.டி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் இருக்கை கைப்பிடியின் உட்புறமாக சாப்பிடும்மேஜைகள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் உள்ள உயர் வகுப்பு பெட்டியில் 56 பயணிகளும், இருக்கைவசதி கொண்ட பெட்டியில் 78 பேரும் பயணிக்கலாம்.

வியாழனை தவிர்த்து வாரம் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த தேஜஸ் விரைவுரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு இடையே மட்டும் நின்று செல்லும்.

மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தரயில் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு ஆறரைமணி நேரத்திற்குள் செல்லலாம்.

சென்னை – திருச்சி இடையே அமரும் வசதிகொண்ட ஏசி பெட்டிகளில் பயணிக்க 690 ரூபாயும், முதல்வகுப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஆயிரத்து 485 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கபட்டுள்ளது.

சென்னை – மதுரை இடையே அமரும் வசதிகொண்ட ஏசி பெட்டிகளில் பயணிக்க 895 ரூபாயும், முதல்வகுப்பு கொண்ட சொகுசு பெட்டியில் பயணிக்க ஆயிரத்து 940 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால் 100 ரூபாய் முதல் 200 ரூபாய்வரை கட்டணம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply