நடைபெறவுள்ள தேர்தலில் முதல் வெற்றியை அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான விடை காணும் வகையில், நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது, இதனுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.

இதில் அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளும், இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. இம்மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் மார்ச் 25ம் தேதியுடன் இங்கு வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாளாகும். இங்குள்ள Alo(ng) East சட்டமன்ற தொகுதிக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச்சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் Minkir Lollen-ன் வேட்பு மனு இன்று நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக பாஜக வேட்பாளர் Sir Kento Jini போட்டியின்றி தேர்வாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையமே வெளியிடும். இது தொடர்பான அறிவிப்பு மார்ச் 28ல் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே பாஜக பொதுச்செயலாளரான ராம் மாதவ் அருணாச்சல பிரதேசத்தின் Yachuli சட்டமன்ற தொகுதியிலும் பாஜக வேட்பாளர் Taba Tedir போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் நடைபெறவுள்ள தேர்தலில் தனது வெற்றிக் கணக்கை அருணாச்சல பிரதேசத்தில் இருந்து பாஜக தொடங்கியுள்ளது

Leave a Reply