கோடநாடு வீடியோ விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒருமிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும். பாஜக கூட்டணிதான் தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை கைபற்றும்.

எதைவைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப் பூர்வமானது என்று கூறுகிறார்கள்?. தேர்தல்வரும் நேரத்தில் யார் மீதும் சகதியை பூசுவார்கள்; மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் குற்றஞ்ச்சாட்டுபவர்கள் ஆதாரங்களை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்ட வேண்டும். ரூ.2000 கோடி அல்ல, ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் நான் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவேன் என்றார்.

Leave a Reply