தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கேகே நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவ மனையில் கட்டப்பட்டிருக்கும் பிணவறை பகுதியை மாற்றவேண்டும் என அம்மருத்துவ மனையின் டீனிடம் தமிழிசை சவுந்திர ராஜன் மனு அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிம் பேசியவர், மருத்துவ நுழைவுத் தேர்வு வரவேற்கத்தக்கது , ஆனால் தேர்வுக்கு தயாராக கால அவகாசம் அளிப்பது மிகவும் அவசிய மாகிறது என்று வலியுறுத்தினார். தேர்தல் கருத்து கணிப்புகளை தடை செய்யவேண்டும். இத்தகைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒரு சார்பாக உள்ளதாகவும், மக்கள் மனதை குழப்பும்விதமாக இருக்கிறது என்றும் தமிழிசை சவுந்திர ராஜன் குற்றம்சாட்டினார்.

Leave a Reply