தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சென்னையில் வெள்ளசேதங்களை மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் நேரில் பார்வையிட்டார். அம்பத்தூர் தொழிற் பேட்டை பகுதி மிகவும் சேதம் அடைந்திருப்பதை தமிழக அரசு உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் தனிசிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில்  வெள்ளபாதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம்கோடி என்று தெரிய வந்துள்ளது.

முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம்கோடி மத்திய அரசிடம், மாநில அரசு கோரி உள்ளது. நிச்சயமாக தேவையான நிதியை மத்தியஅரசு வழங்கும்.

நாங்கள் பார்வையிட்ட வெள்ளச்சேத விவர அறிக்கையை நாளை டெல்லியில் வழங்குவோம். வெள்ள நிவாரணநிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக கிடைக்கவேண்டும். தேர்தல் நிதிபோல் அல்லாமல் நிவாரண நிதியை வழங்க மத்திய மாநில அரசுகளின் முறையான கண்காணிப்பு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply