அரசியல் கட்சிகள் புகாரைதொடர்ந்து, தேர்தல் பறக்கும்படைகளில் மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் விதி மீறலை கண்காணிக்க, ஒவ்வொரு தொகுதியிலும், தலா மூன்று பறக்கும்படைகள் செயல்-படுகின்றன. இதில் தாசில்தார், போலீஸ் எஸ்.ஐ., மற்றும் போலீசார் இருவர் உள்ளனர். ஒவ்வொரு பறக்கும்படைக்கும், 8 மணி நேரம் பணி கொடுக்கப்பட்டது. இவற்றின் செயல்பாடுகள் ஜி.பி.எஸ்., கருவி மூலம் ண்காணிக்கப்படுகின்றன.

பறக்கும்படையில் இருக்கும் தமிழக அரசு ஊழியர்கள், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல் படுவதாக, எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து, ஒவ்வொரு பறக்கும்படையிலும், 'பி' பதவி நிலையிலான மத்திய அரசு ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டு வருகிறார். பறக்கும்படையில் மத்திய ரிசர்வ் போலீசாரும் நியமிக்கப்பட உள்ளனர்.

Leave a Reply