மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு மற்றும் பாஜக சார்பில் இந்தவிழாவில் பங்கேற்பது பெருமை அளிக்கிறது. சமத்துவத்தோடு வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர். ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியைதான் அவர் எதிர்பார்த்தார்.

அவருடைய கனவு மத்தியில் ஆளும் மோடிஅரசால் நிறைவேறுகிறது. இதனை விண்ணுலகத்தில் இருந்து தேவர் பார்த்துவருகிறார். அவர் எதைமையமாக வைத்து வாழ்ந்தாரோ அதை பின்பற்றுவது தான் நமது கடமை. அவருக்கு சிலை வைப்பதோ, படம்வைப்பதோ பெரிதல்ல. அவரது லட்சியத்தை நிறைவேற்றுவது தான் நமது கடமை.

Leave a Reply