சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள கிறிஸ்தவதேவாலயம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநில அரசிடம் மத்தியஅரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பமுடியாது என்வும் மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
 
மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:-  சத்தீஷ்கர்  அரசிடம் இச்சம்பவம் குறித்து நாங்கள் விளக்கம் அளிக்குமாறு அறிக்கைகேட்டுள்ளோம். தேவையான நடவடிக்கைகளை போலீஸ் ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது” என தெரிவித்தார்.
 
தேவாலயம் மீது தாக்குதல் சம்பவத்தின் விபரம்:
 
ராய்பூர் நகரின் புறநகரில் கச்னாபகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. நேற்று அங்கு புகுந்த 15 பேர் கொண்ட  கும்பல் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இதில் -படுகாயம் அடைந்தனர்.இது குறித்து   போலீசார் நடத்திய  விசாரணையில் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள்  தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. அவர்களில்  7 பேரை போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் வந்த 3 மோட்டார் சைக்கிள்களும்  பறிமுதல்  செய்யப்பட்டன.

Leave a Reply