நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப் பட்டால் பாஜக.,வுடன் கைகோக்க தயாராக உள்ளதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார். கமல்ஹாசன் சிலமாதங்களாக அரசியலில் ஈடுபட போவதாக கூறினார்.

இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்தபேட்டி:

அரசியலில் தீண்டாமை என்பதேஇல்லை. நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப் பட்டால் பாஜகவுடன் கைகோக்க தயாராக உள்ளேன்.

பாஜகவின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்திஅளிக்கிறது. ஆனால் அதேசமயம், குறைந்த பட்சம் செயல் திட்டம் உருவானால் பாஜகவுடன் தொடர்பு வைத்துகொள்ள தயங்க மாட்டேன்.

தேர்தலில் போட்டியிட்டு சட்ட ரீதியான பொறுப்பை ஏற்கும் சூழல்வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன். அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவு ஏதோ உணர்ச்சி வயப்பட்டு எடுக்கப் பட்டது அல்ல. நிதானமாக யோசித்தே எடுத்துள்ளேன்.

தேர்தலில் நான் எங்கே போட்டி யிடுவது என்பதை மக்கள்தான் சொல்லவேண்டும். என்னை பொறுத்த வரையில் கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளைத் தான் தேர்வுசெய்வேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Leave a Reply