நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் தான் எதுவும் விமர்சிக்க வில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை விமர்சிக்கும் வகையில் இருந்த காட்சிகளுக்கு பாஜக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் இணையத்தில் மெர்சல் படத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தனர். இதனால் அவர்களை விஜய் ரசிகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.

இது தெடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய தமிழிசை, தனது தொலைப்பேசி எண்ணை வலை தளங்களில் சிலர் பதி விட்டதாகவும், இதனால் அதிகாலை 4 மணி வரை பலரும் தன்னை தொடர்பு கொண்டு அநாகரீகமாக பேசியதாகவும் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply