கொரோனா பரவுவதை தடுக்க நீட்டிக்கபட்டுள்ள லாக்டவுனால் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர் களுக்கான பயணகட்டணத்தில் ரயில்வே நிர்வாகம் 85% ; மாநில அரசு 15% செலுத்தும் என்று பாஜக விளக்கம் அளித்திருக்கிறது.

லாக்டவுன் நீட்டிப்பை தொடர்ந்து மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனி நபர் இடைவெளியுடன் பயணிகள் அமரவைக்கப்பட்டு இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆனால் இந்த ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம்பெறப்படுவதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இதனை முன்வைத்து மத்தியஅரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில், ரயிலில்செல்லும் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்கும் என அறிவித்தார்.

இந்த நிலையில் பாஜகவின் தேசிய செய்திதொடர்பாளர் சம்பிட் பட்ரா தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் தந்துள்ளார்.

லாக்டவுன் தளர்வுகளின்போது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில், தொழிலாளர்களை அழைத்துசெல்லும் ரயில்களுக்கு பயண சீட்டு எங்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது. ரயில்வே நிர்வாகம் 85% மானியத்துடனும் மாநில அரசின் 15% பங்குடனும் இந்தகட்டணம் பகிர்ந்து கொள்ளப்படும் என தெளிவாகவே குறிப்பிட பட்டிருக்கிறது. இதனடிப்படையில் மத்திய பிரதேச பாஜக அரசு பணம் செலுத்தியுள்ளது. இதேபோல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் பின்பற்றலாம் என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags:

Comments are closed.