உலகம் வியந்துபார்க்கும் அளவுக்கு, தொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது,'' என, மத்திய தொழில் துறைஅமைச்சர் சுரேஷ் பிரபு பேசினார்.


அம்பத்துார், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்தும், 13வது, சர்வதேச, 'மிஷின்டூல்ஸ்' கண்காட்சி, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தகமையத்தில், நேற்று துவங்கியது. கண்காட்சியை துவக்கி வைத்து, மத்திய வர்த்தகம், தொழில் துறை மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துதுறை அமைச்சர், சுரேஷ் பிரபு பேசியதாவது:

நாட்டின் தொழில்கொள்கை, விரைவில் வெளியிடப்படும். இதுவரை, இரு முறை தொழில் கொள்கை, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.புதியதொழில் கொள்கை மூலம், தொழில்துறை நவீனமயமாகும். புதியநிறுவனங்கள் அதிகரிக்கும். பழையநிறுவனங்கள் நவீன மயமாக்கப்படும். உற்பத்தி பொருட்களின் தரம் உயர்ந்துள்ளதால், ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

உலகம் வியந்துபார்க்கும் அளவுக்கு, தொழில்வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறிவருகிறது. அதே வேளையில், கிராமப்புற தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவேண்டி உள்ளது.ஐந்து மாநிலங்களில், ஆறு மாவட்டங்கள் என்ற அடிப்படையில், தொழில்வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்க, புதிய திட்டம் வகுத்துள்ளோம்.தொழில் வளர்ச்சி சார்ந்து, மத்திய தொழில்துறை சார்பில், வெளிநாடுகள் செல்லும்போது, தமிழக பிரதிநிதிகளும் உடன் வர வேண்டும்.

அதன்மூலம், தமிழக வளர்ச்சிக்கான, பலதகவல்கள் கிடைப்பதுடன், தொழில் நிறுவனங்களை அடை யாளம் காணமுடியும்.இவ்வாறு அவர் பேசினார். துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது: தமிழகம் தொழில்துறையில் முன்னோடியாக விளங்குகிறது.

பல நாட்டில் இருந்து, இங்கு தொழில் துவங்க, பலர் முன் வருகின்றனர்.அதிக அளவிலான முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது, இதன்மூலம், வேலை வாய்ப்பு அதிகரித்து, பொருளாதாரம் மேம்பட்டுவருகிறது.

அம்பத்துார் தொழிற் பேட்டையில், நேரடியாகவும், மறைமுக மாகவும், இரண்டு லட்சம்பேர் பணிபுரிகின்றனர். அதில், 30 சதவீதம் பேர் பெண்கள். புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த, இந்த கண்காட்சி பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply