தேர்தல் தோல்வி பயத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மீது எதிர்க்கட்சிகள் பழி சுமத்துகின்றன என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்நக்வி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

போரின் போது தோல்வியடையும் நாட்டின் ராணுவம் வெற்றிபெற்ற நாட்டின் ராணுவத்திடம் சரண் அடைந்துவிடும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போது அந்த நிலையில் உள்ளன. தேர்தல்தோல்வி பயத்தால் வாக்குப்பதிவு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகள் பழிசுமத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தலைவர் அமித் ஷாவையும் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். இந்தவிவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார்மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply