நாட்டில் கிராமங்களின் வளர்ச்சிக்கு, தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் வர வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார்.

சீர்திருத்தவாதி நானாஜி தேஷ்முக்கின் நூற்றாண்டு மற்றும் சமூகசோஷியலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் 115-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

நாட்டில் வரிசையில் கடைசி யில் நிற்கும் குடிமகனுக்கும் எல்லாபலன்களும் சென்று சேரவேண்டும். அதற்கான எல்லா ஆதாரங்களும் நம் நாட்டில் உள்ளன. கிராமங்களில் வளங்குன்றா வளர்ச்சியை கொண்டு வரவேண்டும். அதற்கு தற்போதுள்ள தொழில் நுட்பங்களைக் கொண்டு தேவையான மக்களுக்கு எல்லா திட்டங்களையும் கொண்டுசேர்க்க வேண்டும். இது சிறந்த நிர்வாகத்தின் மூலம் சாத்தியமாகும்.

எந்த ஒருதிட்டமும், அது ஆரம்பிக்கப் பட்டதற்கான நோக்கத்தில் இருந்து சற்றும்விலகாமல் அமல்படுத்த வேண்டும். அப்படிசெய்தால் எந்த திட்டமும் வெற்றிபெற்றுவிடும். அரசு திட்டங்களை அமல்படுத்தும் போது முடிவுசார்ந்த அணுகுமுறை வேண்டும். அதேபோல் திட்டங்களை முடிக்க காலநிர்ணயம் முக்கியம்.

அகல் விளக்கு அல்லது மண் விளக்கு போன்ற கிராமங்களில் உற்பத்திசெய்யப்படும் பொருட்களை நகரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்தினால் கூட, அது கிராம மக்களின் நல்வாழ்வுக்கு உதவியாக இருக்கும். கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சாரவசதி, தண்ணீர் விநியோகம், இணையதளத்துக்கான ஆப்டிகல் கேபிள் இணைப்பு ஆகியவை இருந்து விட்டால் போதும். டாக்டர்களும், ஆசிரியர்களும், அதிகாரிகளும் கிராமங்களில் பணியாற்ற தயங்க மாட்டார்கள். அவர்கள் நீண்ட நாட்கள் கிராமங்களில் தங்கும்போது, தானாகவே அவர்களால் கிராம மக்களுக்கு பலன் கிடைக்கும். நகரங்களில் உள்ள வசதிகள் இப்போது கிராமங்களுக்கு வந்து கொண்டி ருக்கின்றன.

நகரங்களில் உள்ள எல்லா வசதிவாய்ப்புகளும் கிராமத்தில் உள்ள சிறுவனுக்கும் கிடைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply