மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி மாநிலங்களின் பங்கு பற்றி விவாதிக்க எல்லா மாநில முதல்வர்களுக்கும் டெல்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில் திரிபுரா முதல்வர் எகானமி கிளாஸில் வந்த புகைப்படத்தைப் போட்டு எள்ளி நகையாடுகிறார்கள் நம் ஊடகங்கள். இதற்கு முன்னாலும் இதே போல் பல முறை அவர் மீடியா வாயில் விழுந்து எழுந்திருக்கிறார்.


ஆனால் இதே மீடியாக்கள் சொல்லாமல் விட்டது….


1) எல்லா பள்ளிகளிலும் NCERT முறைக்கல்வியை கொண்டுவர ஏற்பாடு செய்கிறார்.
2) நலிந்த தேயிலைத் தோட்டங்களைச் சுற்றி சுற்றுலா வளர்ச்சித் திட்டம் அமல் படுத்தப்படுகிறது.
3) மலை ஜாதியினர் வாழும் இடங்களில் 24 ஏகலைவா மாடல் ரெஸிடென்ஷியல் பள்ளிக் கூடங்கள்
4) அங்கு வெகுவாக விளையும் அன்னாசிப் பழங்களை உலக அளவில் சந்தைப் படுத்துதல்
5) பிளாஸ்டிக் பார்க் ஒன்றிற்கு ஏற்பாடு.

இவை அனைத்தும் எதிர் காலத் திட்டங்கள்.
 

இதுவரை நடத்தியிருப்பது…

1) 78 சட்ட விரோதமாகக் கட்டிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்களை இடித்தது.
2) 74 சிட் பண்ட் வழக்குகளை சிபிஐ யிடம் ஒப்படைத்தது
3) பள்ளிக்கூடங்களில் இருக்கும் இடதுசாரி பாடங்களை நிறுத்தியது, அதற்கு மாற்று ஏற்பாடு அமைத்தது
4) முதல் முறையாக நம் பாரத்த்தின் தேசிய கீத்த்தை திரிபுரா சட்டசபையில் பாட வைத்தது.

நக்கலும் நையாண்டியும் மட்டுமே தெரிந்த நாகரீகக் கோமாளிகளே இந்த இடதுசாரி ஊடகங்கள். நாகரீக வேஷம் போடாவிட்டால் என்ன.. தேசியத்தை வளர்க்கவும் நாட்டை நேசிக்கவும் தெரிகிறதே திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு..! அது எத்தனையோ மடங்கு உயர்ந்தது..!

வந்தே மாதரம்.!

Leave a Reply