நக்சல் அமைப்புகள் விரைவில் வேரறுக்கப் படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். ஜார்க் கண்ட் தலை நகர் ராஞ்சியில் பாதுகாப்புப்படைக்காக கட்டப்பட்ட புதியகட்டடங்களை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் பேசியதாவது: வறுமையை ஒழிக்க மத்தியஅரசு போராடி வருகிறது. நாட்டில் ஏழை மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நக்சல்கள் பாமர மக்களின் எதிரிகள். ஏழைகளின் வாழ்வை சீரழிக்கும் வேலையை நக்சல்கள் செய்துவருகின்றன. வலுவிலந்து வரும் நக்சல் அமைப்புகள் விரைவில் வேரறுக் கப்படும்.

 

நக்சல்களை ஒடுக்கபோராடும் பாதுகாப்பு படையினரின் தியாகங்கள், ஒருமாநிலத்தற்கு மட்டுமில்லாமல், நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு உதவுகிறது. அவர்களுக்கு முறையான உட்கட்ட மைப்பு வசதிகள் செய்துதர மத்திய அரசு வேகம்காட்டி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply