பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், நக்ஸல் தீவிரவாதம் வலுவிழந்து விட்டது

பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டை 30 சதவீதம் உயர்த்தியிருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்ட வனம் சார்ந்த பொருள்களின் எண்ணிக்கை 10-ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 50-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, பழங்குடியினரின் வருவாயை உயர்த்து வதற்கான நடவடிக்கையாகும். மேலும், பழங்குடியின குழந்தைகளுக்கு தரமானகல்வி கிடைப்பதற்காக, நாடு முழுவதும் சுமார் 400 ஏகலைவன் மாதிரி பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளன.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் பழங்குடியின மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் எந்தநடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால், முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய், பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினார்

 

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இடைத்தரகர்கள் மட்டுமே பலனடைந்து வந்தனர். ஏழைமக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் ஒரு ரூபாயில் வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே ஒருமுறை குறிப்பிட்டார். இடைத்தரகர்களின் பிரச்னையை அவர் அறிந்திருந்த போதிலும் அதற்கு தீர்வு காண்பதில் தோல்விகண்டுவிட்டார்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கான நிதி, அவர்களை முறையாக சென்று சேருவதை உறுதி செய்திருக்கிறோம். 8 கோடி போலி ரேஷன் அட்டைகள், எரிவாயு இணைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை விரும்பாத எதிர் கட்சிகள் என் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆனால், அந்த விமர்சனங்கள் அனைத்தையும் அணி கலன்களாக ஏற்றுக் கொள்கிறேன்.

மத்திய பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் வலுவிழந்து விட்டது. இளைஞர்கள் வன்முறையை பாதையை கைவிட்டு, ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் பங்கேற்று வருகின்றனர். நாட்டில் பெரும்மாற்றத்தை கொண்டு வருவதற்காக, விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறேன்.

ஒடிஸா மாநிலம், காளஹண்டி மாவட்டத்திலுள்ள பவானி பட்டணம் நகரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேசியது.

Tags:

Leave a Reply