பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப் பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பாஜக சார்பில் , 'கறுப்புப்பண எதிர்ப்பு நாள்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூறியுள்ளார்.

இன்று, சென்னையில் செய்தியா  ளர்களைச் சந்தித்த அவர், `நடிகர் கமல்ஹாசனுக்கு சினிமாவைத் தவிர்த்து, அரசியல் ஞானம் இல்லை. கமல் அரசியலுக்குவருவதை வரவேற்கிறேன். அவரின் செயல் பாடுகளைப் பொறுத்தி ருந்துதான் பார்க்கவேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார்.

நேற்று, தனது 63-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கமல்ஹாசன், `அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன். சில ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொண்டு வருவதால், அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமாகிறது. ஜனவரி மாதத்துக்குப் பின் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும். எனது அரசியல் அஸ்திவாரம் பலமாக இருக்கவேண்டும்' என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply