நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சி பெயர், மற்றும் கொடியை அறிமுகம் செய்தர். 

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வரும் அரசியல் பிரகடனமேடைக்கு கமல்ஹாசன் வந்தார். அவருடன் தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் மேடைக்கு வந்தனர்.. 

பொதுக்கூட்ட மேடைக்குவருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மைதானத்தில் அவரது கட்சிக் கொடியை கமல் ஏற்றிவைத்தார். விஸ்வரூபம் படத்தின் யாரென்று தெரிகிறதா பாடல் இசைபின்னணியில் ஒலிக்க கமல், தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். 

பின்னர் பேசிய அவர் கட்சியின் பெயர்மக்கள் நீதி மய்யம் என்றார்.  5 கைகள் இணைந்த வெள்ளை நிற கொடியை ஏற்றினார். இதுதலைவர்கள் நிறைந்த அரங்கம். நான் உங்களின் கருவி என்று அறிவித்தார்.

Leave a Reply