டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் வழங்குவது பற்றி கமல் டுவிட்டரில், தனது கருத்தை பதிவுசெய்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், மதுரையில் பாஜக சார்பில் விழா நடத்தப் பட்டது. அதில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.
நடிகர் கமல் ஒவ்வொரு விஷய த்திலும் கருத்துக்களை கூறி, சர்ச்சையை ஏற்படுத்திவருகிறார். அவர் கருத்துக்களை கூறுவதாலேயே தன்னை முன்னிலைபடுத்தி கொள்கிறார்.


தற்போது டெங்குகாய்ச்சல் பற்றி அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதை வைத்து நடிகர் கமலை, டெங்கு காய்ச்சலுக்கோ, டெங்குவைபரப்பும் கொசுவுக்கோ அவரை ஆதரவாளராக கூற முடியாது என்றார்.

Leave a Reply