நடிகர் ரஜினி அரசியலுக்குவந்தால் பாஜக முழுமனதுடன் வரவேற்கும் என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

சுனாமி ஏற்பட்டு இன்றோடு 13 ஆண்டுகளான நிலையில் , இன்று நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. பாஜக சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தநிகழ்வில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் .

அவர் கூறியதாவது’ சுனாமியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இன்னும் முறையாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை . மத்தியில் இருக்கும் பாஜக அரசு மீனவர்களுக்கு அதிகநன்மைகளை செய்திருக்கிறது. தற்போது காணாமல் போன மீனவர்களை தேடவும் உதவி வருகிறது.

ரஜினி அடிக்கடி அரசியலுக்குவருவதாக கூறுகிறார். இந்த முறை அவர் முடிவில் ஒரு உறுதி தெரிகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் பாஜக எப்போதும் வரவேற்கும் . எங்களை பொருத்தவரை ஊழல் இல்லா ஆட்சி தமிழகத்தில் அமையவேண்டும் . ஆர். கே.நகர் தேர்தலின் முடிவே தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply