நடுத்தரமக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யார்? என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.


 "எகனாமிக் டைம்ஸ்' ஆங்கிலப்பத்திரிகை சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 7 முக்கிய நகரங்களில் வசிக்கும் மாத ஊதிய தாரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெரும்பாலானோர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 மத்தியில் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார செயல்பாடு எவ்வாறு இருக்கிறது? என எழுப்பப்பட்ட கேள்விக்கு 86 சதவீதம்பேர் சிறப்பாக இருப்பதாக பதிலளித்துள்ளனர்.  மோடி அரசு வேலை வாய்ப்பை உருவாக்கியிருப்பதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும் 62 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
 மக்கள் செல்வாக்கில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை மிகவும் பின்னுக்குத் தள்ளிய மோடி பத்துக்கு 7.5 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ராகுல்காந்திக்கு 3.6 சதவீதம் பேரே மக்கள்செல்வாக்கு அதிகம் உள்ளதாக அந்த ஆய்வில் தெரித்துள்ளனர்.

Leave a Reply