ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக நடவடிக்கைகளை சீர்குலைக்க திட்டமிடப்பட்டிருந்த ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் சதியை முறியடித்தற்காக, பாதுகாப்புபடைகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில், ‘‘பாகிஸ்தானின் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச்சேர்ந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதும், அவர்களிடம் அதிகளவிலான ஆயுதங்களும், வெடிபொருட்களும் இருந்ததும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டதைக் காட்டுகிறது. அதுமீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

மற்றொரு டிவிட்டரில், ‘‘நமது பாதுகாப்புப்படைகள், மீண்டும் மிகுந்த துணிச்சலையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளன. அவர்கள் விழிப்புடன் செயல்பட்டதற்கு நன்றி. ஜம்முகாஷ்மீரில் அடிமட்ட ஜனநாயக நடவடிக்கைகளை சீர்குலைக்க திட்டமிடப்பட்டிருந்த சதியை அவர்கள் முறியடித்துள்ளனர்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.