பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், நாட்டுமக்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளதாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் ஷாடோல் பகுதியில், பா.ஜ., சார்பிலான வாகனப் பேரணியை, அமித் ஷா துவக்கிவைத்தார். அவரும் ஹெல்மெட் அணிந்தவாறு இரு சக்கர வாகனத்திலும் பயணித்தார். பின் பத்திரிகை யாளர்களை சந்தித்த அமித் ஷா கூறியதாவது;

பிரதமர் மோடி ஆட்சியில், மக்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு, மக்களின் நலனில் ஒரு போதும் அவக்கறை கொண்ட தில்லை. பாகிஸ்தான் உடனான விகாரங்களில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கைகள், மக்களுக்கு ஒரு போதும் திருப்திகரமாக இருந்ததில்லை இவ்வாறு அவர் கூறினார்.

நாடுவிடுதலை அடைந்ததில் இருந்து, பயங்கரவாதிகளை கையாள்வதில் நமது அரசு எடுத்துள்ள நடவடிக்கையே சிறப்பானது என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் எண்ணற்ற பயங்கரவாதிகள் கொல்ல பட்டுள்ளனர்.

புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஒருமுறையாவது விமர்சித்திருக்க வேண்டும். இதைச்செய்யாத அவரிடம் இருந்து எப்படி நாம் எதையும் எதிர்பார்க்க முடியும்? அவரை எப்படி நம்புவது? பாகிஸ்தானில் சூழ்நிலை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் உதட்டள விலாது அவர் விமர்சித்திருக்க வேண்டும்.

அபிநந்தனை குறுகிய காலத்துக்குள்ளாக விடுதலை செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது, நமது ராஜீய வெற்றியாகும்.
பயங்கரவாதத்தை துளியும் பொறுப் பதில்லை என்ற கொள்கையை செயல்படுத்தும் துணிவும், அரசியல் பலமும் மோடி அரசுக்கு உள்ளது என்ற செய்தி அவர்களை (பாகிஸ்தான்) சென்றடைந் திருக்கும் .

இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றுக் கூறிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அமித் ஷா விமர்சித்தார். பயங்கரவாதத்தைத் தூண்டி விடக் கூடிய நாட்டுடன் இந்தியாவை எப்படி ஒப்பிடலாம்? என்றார் அவர்.

Leave a Reply