நம்பிக்கை என்றபெயரில் நடக்கும் வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என மான்கீபாத் உரையில் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இன்று காலை வானொலியில் பிரதமர்மோடி 'மான்கீ பாத்' உரையாற்றினார். அதில் பிரதமர் மோடி கேரளமக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்தை தெரிவித்தார். மேலும்  நாட்டில் வன்முறைக்கு இடமில்லை, கலவரங்களில் ஈடுபடும் குண்டர்கள் கடும்நடவடிக்கைகளை சந்திக்கவேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு ஒவ்வொருவரும் கட்டுப்படவேண்டும் என்று தெரிவித்துள்ள மோடி, தேராசச்சா அமைப்பினர் சட்டத்தை கையில் எடுத்து பாரதநாட்டின் வளர்ச்சியை முடமாக்கி உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மத நம்பிக்கை அடிப்படையிலான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அவர், விழாக் காலங்களில் ஏற்படும் வன்முறைகள் வருத்தம் அளிப்பதாக கூறினார்.

 

Leave a Reply