பாஜக 5-10 ஆண்டுகள் ஆட்சிசெய்வதற்காக அரியணையில் அமரவில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக நீடிக்கும் என்று கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா தொண்டர்களுக்கு உற்சாக மூட்டினார்.

மத்தியப் பிரதேசத்தில் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.

மத்தியில் பெரும்பான்மை அரசு, மாநிலங்களில் 1,387 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக உச்சத்தில் இருந்தாலும் தொண்டர்கள் கட்சி இன்னும் சிலதொலைவு செல்ல வேண்டும் என்று கருதுகின்றனர்.

“இன்று மத்தியில் 330 எம்பிக்களுடன் பெரும்பான்மை, பல்வேறு மாநிலங்களில் 1387 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக உச்சத்தில் உள்ளது. ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட தொண்டர்கள் இன்னும் சிலதொலைவு செல்ல வேண்டும் என்று கருதுகிறார்கள்.

நாம் 5-10 ஆண்டுகளுக்காக ஆட்சி அமைக்க வில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப் போகிறோம். 40-50 ஆண்டுகளில் ஆட்சியின் மூலம் நாட்டில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று உறுதிபூணுவோம்.

நம் கட்சிக்கொடி பறக்காத இடம் இந்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும். இதற்கு நாம் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.

காஷ்மீர்முதல் கன்யாகுமரிவரை, காம்ரூப் முதல் கட்ச்வரை நம்கட்சி ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருப்பதை உறுதி செய்வோம்” என்றார் அமித் ஷா

Leave a Reply