நயினார்நாகேந்திரன் பா.ஜ.கவில் இணைந்தது வெறும் ஆரம்பம்மட்டுமே என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் முதல்வர்பதவி எப்போது பறிபோகும் என்று தி.மு.க காத்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். அ.தி.மு.கவில் இருந்த நயினார் நாகேந்திரன் தற்போது பா.ஜ.கவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர் கேட்டகேள்விக்கு பதிலளித்த அவர், இது வெறும் ஆரம்பம் மட்டுமே எனறு தெரிவித்தார். அத்துடன் அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையீடுஇல்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply