நரிக்குறவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழகஅரசு மூலம் மத்திய அரசுசெய்யும் என்று பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் தெரிவித்துள்ளார்.இது குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர்கூறியதாவது:-

பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் நேற்றுகாலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைவந்தார்.   விமானநிலைய வாயலில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் அமைச்சருக்கு பாசிமாலை அணிவித்து வரவேற்றனர்.அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அமைச்சர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நரிக்குறவர்கள் அன்புடன் பாசிமாலை அணிவித்து வரவேற்றது மகிழ்ச்சிஅளிக்கிறது. பிற்படுத்தப் பட்டோர் , மலைவாழ் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு அனைத்து அடிப்படைவசதிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.குறிப்பாக பட்டியல் இனத்தைசேர்ந்த நரிக்குறவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துவதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பட்டியல் இனத்தைசேர்ந்தவர் நரிக்குறவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.அவர்களின் வாழ்க்கை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. மத்திய அரசு தமிழக அரசு உதவியுடன் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும். இவ்வாறு அவர் பேட்டி அளித்துள்ளார்.

Tags:

Leave a Reply