''மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் முயற்சி மற்றும் பிரதமர் நரேந்திரமோடியின் ஒத்துழைப்பால்தான், சென்னை வண்ணாரப் பேட்டை முதல் திருவொற்றியூர் – விம்கோ நகர் வரையிலான, மெட்ரோ ரயில் விரிவாக்கதிட்டம் துவக்கப்படுகிறது,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.


சென்னை, வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் – விம்கோநகர் வரையிலான, சென்னை மெட்ரோ ரயில், முதல் கட்ட நீட்டிப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழா, தண்டையார்பேட்டையில் நடந்தது.முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிபேசியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தை, வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் – விம்கோ நகர்வரை நீட்டிக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத்தருவதில், முக்கிய பங்காற்றியவர் வெங்கையா நாயுடு. தமிழகத்தின் உற்றநண்பர்; தமிழக நலன்களை காப்பதிலும், தமிழக அரசின் திட்டங்களுக்கு, மத்திய அரசின் அனுமதியை விரைந்து பெற்றுத்தருவதிலும் முன் நிற்பவர். மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்ததும், 2014 செப்., 5ல், சென்னையில் வெங்கையாநாயுடு, என்னை சந்தித்தார். அப்போது, வண்ணாரப் பேட்டை முதல் திருவொற்றியூர் – விம்கோ நகர் வரையிலான, மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு, ஒப்புதல் வழங்கும்படி வலியுறுத்தினேன்.

அவரது ஆலோசனைப்படி, தமிழக அரசு அதிகாரிகள், மத்தியஅரசு அதிகாரிகளோடு, இதுதொடர்பாக விரிவாக விவாதித்தனர். அதன் அடிப்படையில், அவர் பொறுப்புவகிக்கும், நகர்ப்புற வளர்ச்சித்துறை, இதை பரிந்துரைத்தது. அவரது முயற்சி மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஒத்துழைப்பால்தான், இந்த திட்டம் துவக்கப்படுகிறது.

Leave a Reply