மே 26ம் தேதியுடன் நரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது.4 ஆண்டுகளில்  செய்த சாதனை.

10 வருடங்களாக ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும், கடந்த வருடம் 2017ல் ஜிஎஸ்டி வரி விதிப்பை மோடி அரசு அமல்படுத்தியது. முதல்சில மாதங்கள் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள்  வந்தன. ஆனால், அது திருத்தப்பட்டு சரி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால், ஜிஎஸ்டி வரி நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. மறைமுக வரிகளில் பெரும் சீர்திருத்தம் இதனால் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 53 நாடுகளுக்கு சென்றுள்ளார். வெளிநாட்டு உறவில் இந்தியா மேம் பட்டுள்ளது. சீனாபோன்ற வல்லரசு நாடுகளை டோக்லாமில் நேருக்குநேர் இந்தியா எதிர்கொண்டதோடு, சீனாவின் முயற்சிகளை முறியடித்தது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என பாக். எல்லைக்குள்சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது,  தக்கபதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது.
 
விஜய்மல்லையா, நிரவ் மோடி போன்ற பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிசென்றதால் கடும் விமர்சனங்களை சந்தித்த மோடி அரசு, அதற்கு பரிகாரமாககொண்டு வந்ததுதான் The Economic Offenders Bill சட்டம். ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, இந்த சட்டம் வகை செய்கிறது.

 

மோடி அரசு வந்தபிறகு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வெளியானதை போல ஊழல் குற்றச்சாட்டுகள் வரவில்லை. ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசின் இறுதி கால கட்டத்தில், எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து பலஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டன. ஆனால், மோடி அரசுக்கு எதிராக அதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன் வைக்கவில்லை.

Leave a Reply