பிரதமர் நரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கு இன்றுசெல்கிறார்.

இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பிரதமர் நரேந்திரமோடி ஸ்வீடன் செல்கிறார். இன்று மாலையில் அவர், ஸ்டாக்ஹோம் சென்றடைவார். முன்னதாக, ஸ்வீடன் செல்லும் மோடி, அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோஃப் பென்னைச் சந்திக்கிறார். அங்கு, ஸ்வீடன் நாட்டுத்தொழிலதிபர்கள் மற்றும் ஸ்வீடன் வாழ் இந்தியர்களையும் சந்தித்துப்பேசுகிறார்.

பின்னர், ஏப்ரல் 17-ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறார். அன்று முதல் 20-ம் தேதி வரை இங்கிலாந்தில் தங்குகிறார். ஏப்ரல் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும் காமன் வெல்த் நாட்டின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இங்கிலாந்துசெல்லும் மோடியின் பயணம் இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

Leave a Reply